கேரளாவிற்கு கடந்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல் - கோவையில் 2 பேர் கைது

கோவை சிங்காநல்லூர் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் நடத்திய வாகனசோதனையில் கேரளாவிற்கு கடத்த முயன்ற 1050 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாகன ஓட்டுநர் மற்றும் உதவியாளரை கைது செய்த போலீசார், வாகனம் மற்றும் ரேஷன் அரிசியின் உரிமையாளரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.


கோவை: குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல்துறை கூடுதல் இயக்குனர் அருண் ஐ.பிஎஸ் பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் நேற்று இரவு 09.00 மணிக்கு கோவை சிங்காநல்லூர் அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்பொழுது அவ்வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் பொது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தலா 50 கிலோ எடை கொண்ட 21 வெள்ளை நிற மூட்டைகள் என மொத்தம் 1050 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.



இதையடுத்து, அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், அந்த வாகனத்தை ஓட்டி வந்த வல்லரசு, அவருக்கு உதவியாக வந்த நல்ல மணி என்பவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அவர்கள் சிங்காநல்லூர் நெசவாளர் காலனி, நீலி கோனம்பாளையம் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவின் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்று வரும்படி கொழிஞ்சாம்பாறை சேர்ந்த காஜா என்பவர் தங்களை ஆட்டோவை கொடுத்து அனுப்பி வைத்ததாகத் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, வல்லரசு மற்றும் நல்லமணி ஆகிய இருவரையும் கைது செய்த குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார், அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வாகனம் மற்றும் அரிசியின் உரிமையாளரான கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறையை சேர்ந்த காஜா என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...