கோவை அருகே மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதி விபத்து - இளைஞர் உயிரிழப்பு

கோவை ஈச்சனாரி அருகே இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மின்விளக்கு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த முத்துச்செல்வம் என்ற தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மகன் முத்து செல்வம் (வயது26).

இவர் கோவை ஈச்சனாரி அருகே தனியாக அறை எடுத்து தங்கி மலுமிச்சம்பட்டியில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், வழக்கம்போல் பணி முடிந்து இரவு 11.30 மணியளவில் தனது அறைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது, ஈச்சனாரி மேம்பாலத்தை கடந்து சென்றபோது, சாலையில் இருந்த வேகத்தடுப்பில் மோதாமல் இருக்க, வலது புறமாக அவர் தமது இரு சக்கர வாகனத்தை திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த அந்த இரு சக்கர வாகனம் சாலை நடுவே இருந்த மின்விளக்கு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த முத்துச்செல்வத்தை, அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...