ஒ.பி.எஸ், டிடிவி சந்திப்பு என்பது கண் கெட்டபின் சூரியநமஸ்காரம் போன்றது..! - கோவை செல்வராஜ் விமர்சனம்

ஒரு மாதத்திற்கு 8 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கும் அண்ணாமலைக்கு திமுகவை பற்றியோ திமுக தலைவர் ஸ்டாலின் பற்றியோ பேச எந்த அருகதையும் இல்லை. பாஜகவிற்கு மாநில தலைவராக இருக்க அண்ணாமலைக்கு ஒரு தகுதியும் இல்லை என்று திமுகவின் செய்தி தொடர்பு துணை செயலாளர் கோவை செல்வராஜ் தெரிவித்தார்.



கோவை: கோவை தெற்கு மாவட்டம் நகர திமுக சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் செய்தி தொடர்பு துணை செயலாளர் கோவை செல்வராஜ் கலந்துகொண்டார்.



அப்போது அவர் பேசியதாவது:

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இரண்டு ஆண்டுகளில் இலவச பேருந்து பயணம், மாணவ மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கும் திட்டம், நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. சொல்லாத பல திட்டங்களையும் தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்தவரை நம்பி மட்டுமே இருக்கிறார். அவரும் அவர் மனைவியும் குழந்தைகளும் கொடுக்கும் உடை கூட அடுத்தவர் தந்துதான் அவர் பயன்படுத்தி வருகிறார். ஒரு மாதத்திற்கு 8 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கும் அண்ணாமலைக்கு திமுகவை பற்றியோ திமுக தலைவர் ஸ்டாலின் பற்றியோ பேச எந்த அருகதையும் இல்லை. பாஜகவிற்கு மாநில தலைவராக இருக்க அண்ணாமலைக்கு ஒரு தகுதியும் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓபிஎஸ் தினகரனை சந்தித்தது, சசிகலாவை சந்திப்பது இவையெல்லாம் கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் செய்வது போல் இருவரும் எல்லாவற்றையும் எல்லோரையும் இழந்து விட்டு சூரியநமஸ்காரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இது எந்த காலத்திலும் எடுபடாது.

சபரீஸ்வரனும் ஓபிஎஸ்-ம் சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். அது மூன்று நிமிடங்கள் சந்திப்பு. பிறகு அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. இதை இட்டுக்கட்டி சொல்வது கண்டிக்கத்தக்கது. ஜெயக்குமார் ஒரு மட்டமான அரசியல்வாதி. அரசியல் நாகரீகம் தெரியாதவர் போக்சோ ஜெயக்குமார் என்று அவர் அப்போது விமர்சித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...