ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவை சந்தித்த சிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி!

ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் குறும்படத்தில் நடித்து உலகப் புகழ்பெற்ற பொம்மன் - பெள்ளி தம்பதி மற்றும் படத்தை இயக்கிய கார்த்திகி கோன்சால்வ்ஸ் ஆகியோரை சி.எஸ்.கே கேப்டன் தோனி சென்னையில் இன்று சந்தித்து பாராட்டு தெரிவித்து அவர்கள் பெயர் அச்சிடப்பட்ட ஜெர்சியையும் பரிசளித்தார்.



சென்னை: ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படக்குழுவினரை சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் வசித்து வரும் பொம்மன் - பெள்ளி தம்பதி, யானைகள் பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் தாயை பிரிந்த ரகு, பொம்மி என்ற 2 குட்டி யானைகளை பராமரித்து தங்களின் குழந்தைகள் போல் வளர்த்து வந்தனர்.

இந்த குட்டி யானைகளை பொம்மன் - பெள்ளி தம்பதி எவ்வாறு பராமரித்து வந்தனர் என்பதை மையமாக கொண்டு தி எலிபன்ட் விஸ்பரரஸ் என்ற பெயரில் ஆவணப்படம் உருவாக்கப்பட்டது. இந்த ஆவண படத்தை கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கி இருந்தார். குனீத் மோங்கா தயாரித்திருந்தார்.

இந்த படத்தில் மிகவும் நேர்த்தியாக காட்டப்பட்டிருந்த பொம்மன்-பெள்ளி தம்பதிக்கும், யானை குட்டிகளுக்கும் இடையேயான உறவு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்த ஆவணப்படம் சமீபத்தில் நடந்த 95வது ஆஸ்கர் விழாவில் விருதையும் வென்றது. இதன்மூலம் பொம்மன்-பெள்ளி தம்பதி உலகம் முழுவதும் புகழ் பெற்றனர்.



இந்நிலையில், இன்று ஆவணப்பட இயக்குனர் கார்த்திகி மற்றும் பொம்மன் - பெள்ளி தம்பதி ஆகியோர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சி.எஸ்.கே கேப்டன் எம்.எஸ்.தோனியை சந்தித்தனர். அப்போது அவர்களை வெகுவாக பாராட்டிய தோனி, அவர்களுக்கு 7 ஆம் எண் கொண்ட அவரவர் பெயர் அச்சிடப்பட்ட ஜெர்சியை பரிசாக அளித்ததுடன், புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...