கோவையில் சாலையில் சென்ற நபரிடம் செல்போன் பறிப்பு - மின்வாரிய ஊழியர் கைது!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்து செல்போனை பறித்துச் சென்ற மர்மநபர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில், அதில் ஒருவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், குனியமுத்தூர் மின்வாரிய ஊழியர் வன்னியராஜா என்பது தெரியவந்தது.



கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் செல்போனை பறித்துச் சென்ற மின்வாரிய ஊழியரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கோவை கவுண்டம்பாளையம் அருகே சாலையில் நடந்து சென்ற நபரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் செல்போனை பறித்து சென்றனர். அப்போது அவர்கள் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

இதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த நபரை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர். அவருடன் வந்தவர் தப்பிச் சென்ற நிலையில், பிடிபட்ட நபரை பொதுமக்கள் சாய்பாபா காலனி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதனைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த வன்னியராஜா என்பதும், இவர் குனியமுத்தூர் மின்வாரியத்தில் மின் ஊழியராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், இவர் தனது நண்பருடன் நள்ளிரவில் சாய்பாபா காலனி பகுதியில் ஏற்கனவே ஒருவரிடம் செல்போனை பறித்துக் கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து வன்னியராஜாவை கைது செய்த போலீசார் தப்பி சென்ற அசோக் என்பவரையும் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...