கோவை வடவள்ளியில் பெய்த கனமழை - வேரோடு சாய்ந்த மரங்கள்!

வடவள்ளியில் பெய்த கனமழை காரணமாக 15-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்ததால் 2 மின்கம்பங்கள் சேதமடைந்து அபிராபி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் அவதியடைந்தனர்.


கோவை: வடவள்ளியில் பகுதியில் பெய்த கனமழையால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

கோவை வடவள்ளி பகுதியில் நேற்று இரவு காற்றுடன் கனமழை பெய்தது. மழையின் காரணமாக சுமார் 15-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தது. அபிராமி நகர் பகுதியில் மரம் விழுந்ததில் 2 மின்கம்பங்கள் சேதமடைந்தது.

மேலும் எஸ்.பி.கே. நகர், அருண் நகர், எம்.ஜி.ஆர் நகர், ராகவேந்திரா நகர், மகாராணி அவென்யூ உள்ளிட்ட பகுதியில் மரம் விழுந்தது. மேலும் பலத்த காற்று வீசியதால் மருதமலை சாலையில் உள்ள தனியார் தியேட்டர் முன்பு வைக்கப்பட்ட தகரம் சாய்ந்தது. இதனால் வடவள்ளி சுற்றுவட்டாரப் பகுதியில் நீண்ட நேரம் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

அதேபோல வானங்கள் செல்ல வழி இல்லாமல் தவித்தனர். இன்று காலை முதலே மாநகராட்சி ஊழியர்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...