காவல் எண்கள் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கோவை மாவட்ட போலீசார்!

காவல் எண்கள் குறித்து கோவை மாவட்டத்தில் பெண்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பெண்களுக்கு ஏதாவது இன்னல்கள் ஏற்படும் போது 181 என்ற எண்ணில் போலீசாரை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினர்.


கோவை: காவல் எண்கள் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை மாவட்ட போலீசார் பேருந்து நிறுத்தங்களில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின்படி, கோவை போலீசார் பெண்கள் அதிகம் கூடி நிற்கும் பேருந்து நிறுத்தங்களுக்கு சென்று, காவல் உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, இன்று காலை பூ மார்க்கெட் பேருந்து நிறுத்தத்தில் பெண்கள் அதிகமாக கூடியிருந்தனர். அப்பகுதியில் நின்று கொண்டிருந்த பெண்களிடம் போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

அப்போது, பெண்களுக்கு ஏதாவது இன்னல்கள் ஏற்படும் போது 181 என்ற எண்ணில் போலீசாரை தொடர்பு கொள்ளலாம். மேலும் குழந்தைகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் 1098 என்ற எண்ணில் அழைக்கலாம்.

பொதுவான அழைப்புகளுக்கு 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். முதியோருக்கு ஏதும் பிரச்சினை என்றால் 14567 என்ற எண்ணில் அழைக்கலாம்.

மேலும் எஸ்.ஒ.எஸ் என்னும் போலீசார் செயலி குறித்தும் போலீசார் எடுத்துரைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...