மேட்டுப்பாளையம் அருகே மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிப்பு!

மேட்டுப்பாளையம் அருகேயுள்ள நடூரை சேர்ந்தவர் மாரத்தாள்(68). சம்பவத்தன்று வீட்டில் தனி அறையில் தூங்கிய போது, கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றது பரபரபப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (44). கூலித் தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். வெள்ளியங்கிரி தனது 68 வயது தாய் மாராத்தாள் என்பவரை தன்னுடன் வைத்து கவனித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டுப் படுத்துத் தூங்கினர்.

மாராத்தாள் தனியாக ஒரு அறையில் படுத்து இருந்தார். நள்ளிரவு வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் மூதாட்டி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை அவருக்கு தெரியாமல் கழற்றி தப்பிச் சென்றனர். மறுநாள் செயின் மாயமானது கண்டு மராத்தாள் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து தனது மகனிடம் தெரிவித்தார். அவர் வீட்டை ஆய்வு செய்த போது பின் பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இது குறித்து அவர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து மூதாட்டியின் கழுத்தில் கிடத்த 5 பவுன் செயினை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...