துடியலூரில் திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்!

கோவை மாவட்டம் துடியலூர் பகுதிக்கழக திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், பகுதிக்கழக பிரதிநிதிகள் பங்கேற்று திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.



கோவை: கோவை மாவட்டம் துடியலூரில் திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே திமுக சார்பில், திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.



துடியலூர் பகுதிக்கழக திமுக செயலாளர் அருள்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 1வது வட்ட செயலாளர் ராஜசேகர் அனைவரையும் வரவேற்றார்.

முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் வெ.நா.பழனியப்பன், மூத்த வழக்கறிஞர் அருள்மொழி, பகுதி அவைத்தலைவர் பழனிசாமி, துணை செயலாளர்கள் சண்முகசுந்தரம், குமார், ஐ.டி. பகுதி ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியம், மாவட்ட பிரதிநிதிகள் சதீஸ்குமார், சோமசுந்தரம், தன்ராஜ், சம்பத்குமார், அருண்குமார், 2, 13, 14, 15 வட்ட கழக செயலாளர்கள் சண்முகம், சுந்தரம், சோமசுந்தரம், ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக திமுக தலைமை கழகப் பேச்சாளர் உடுமலை தண்டபாணி கலந்துக் கொண்டு திமுக 2 ஆண்டு சாதனைகள் குறித்து பேசினார்.

இந்த கூட்டத்தில் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், 1வது மாமன்ற உறுப்பினர் கற்பகம், 2வது மாமன்ற உறுப்பினர் புஷ்பமணி, மதிமுகவை சேர்ந்த 14வது மாமன்ற உறுப்பினர் சித்ரா தங்கவேல், பொதுக்குழு உறுப்பினர் கதிர்வேல்சாமி உட்பட பொதுக்குழு உறுப்பினர்கள், அணி செயலாளர்கள், துணை அமைப்பாளர்கள், 1, 2, 13, 14, 15 வட்ட கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...