சொத்துவரி செலுத்தாத வரிதாரரின் குடிநீர் இணைப்பை துண்டித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் நடவடிக்கை


கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் அவர்களின் உத்தரவின் பேரில் வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி செலுத்தாத காரணத்தினால் இன்று (1.03.2017) வரிதாரர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டு 40-ல் அமர்நாத் வீதி, வார்டு 44-ல் அன்னையப்பன் வீதி மற்றும் வார்டு 43-ல் மீனாட்சி கார்டன் பகுதியில் உள்ள வரிதாரர்கள் நிலுவையில் சொத்து வரி செலுத்தக் கோரி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இருப்பினும், மேற்குறிப்பிட்ட வரிதாரர்கள் சொத்து வரி செலுத்தாத காரணத்தினால் அந்த வரிதாரர்களின் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், மாநகராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தி ஜப்தி நடவடிக்கைகளை தவிர்க்குமாறு கோவை மாநகராட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...