கோவை மதுக்கரை ரயில்வே தண்டவாளம் அருகே இளைஞர் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை!

கோவை சுந்தராபுரம் - மதுக்கரை இடையே உள்ள மோகன் நகர் ரயில்வே தண்டவாளம் அருகே அழுகிய நிலையில் இளைஞர் சடலம் மீட்கப்பட்ட நிலையில், இறந்தவர் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த வினித் என்கிற ஆசிப் பிரிட்டோஸ் (22) என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.


கோவை: மதுக்கரை அடுத்த மோகன் நகர் ரயில்வே தண்டவாளத்தில் அழுகிய நிலையில் இளைஞர் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுந்தராபுரம் - மதுக்கரை இடையே மோகன் நகர் ரயில்வே தண்டவாளம் உள்ளது. இந்த தண்டவாளத்தின் அருகே அழுகிய நிலையில் இளைஞர் சடலம் ஒன்று கிடப்பதாக, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து அங்கு வந்த போத்தனூர் ரயில்வே காவல்துறை மற்றும் மாவட்ட காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சடலமாக கிடந்த வாலிபர் இறந்து சுமார் 3 நாட்களுக்கு மேல் ஆனது தெரியவந்தது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் கோவை குனியமுத்தூர் மயில்கல் பகுதியை சேர்ந்த வினித் என்கிற ஆசிப் பிரிட்டோஸ் (22) என்பது தெரியவந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டிலிருந்து வெளியேறிய வினித்தை வீட்டிலிருந்தவர்கள் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து வினித் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினித் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...