வால்பாறை அருகே 3 சிறுத்தைகள் நடமாட்டம் - சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

வால்பாறை அருகே மலுக்கபாறை எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் மூன்று சிறுத்தைகள் நடமாடும் காட்சி அப்பகுதியில் உள்ள காவல்நிலைய சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. சிறுத்தைகள், யானைகள், கரடிகள் போன்ற விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

சில தினங்களாக குடியிருப்பு பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துவந்தனர். வீட்டில் வளர்க்கும் ஆடு, கோழி, நாய் போன்ற வளர்ப்பு பிராணிகளை சிறுத்தை கொன்று சாப்பிட்டுச் சென்றதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், வால்பாறை அருகே உள்ள மலுக்கப்பாறை எஸ்டேட் பகுதியில் மூன்று சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி வருவது அங்குள்ள காவல் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

இரவில் குடியிருப்புகளில் இருந்து நாய், கோழி, ஆடு போன்றவைகளை வேட்டையாடி சாப்பிட்டுவிட்டு தேயிலை தோட்டத்திற்கு அவை சென்றுவிடுகின்றன.



தற்போது காவல் நிலைய சிசிடிவி கேமராவில் பதிவான சிறுத்தை நடமாடும் காட்சிகள் வெளியாகியுள்ளதால், வால்பாறை பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...