கோவையில் 22.5 டன் பழங்கள் பறிமுதல் - உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி

கோவையில் பல்வேறு இடங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழு நடத்திய அதிரடி ஆய்வில், ரசாயன கலந்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 22.5 டன் மாம்பழங்கள் மற்றும் சாத்துகுடி பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான அந்த மாம்பழங்களை உரம் தயாரிப்பதற்காக குப்பை கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது.



கோவை: தமிழ் நாடு உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவின் பேரில், மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் படி, மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் தமிழ்செல்வன் தலைமையில்,உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு, கோவை மாநகரில் பகுதில் உள்ள வைசியால் வீதி, பெரிய கடைவீதி, பெரிய கடை வீதி -I, மற்றும் II, கருப்பன கவுண்டர் வீதி, முத்து விநாயகர் கோவில் வீதி, தர்மராஜா கோவில் வீதி, கெம்பட்டி காலனி வீதி ஆகிய பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 8 குழுவாக மொத்தம் 16 பேர் அடங்கிய குழுவினர் மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் திடீர் கள ஆய்வு மேற்கொண்டனர்.



அப்போது, 45 கடைகள் மற்றும் குடோன்கள் ஆய்வு செய்யப்பட்டது.



அதில், 16 கடை மற்றும் குடோன்களில் சிறிய இரசாயன பொட்டலங்களை ஒவ்வொரு பழ பெட்டிகளுக்குள் வைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்து, பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் சுமார் 22,618 (22.5 டன்) எடையும், மேலும் சுமார் 2,510 கிலோ (2.5 டன்) எடை அளவு உள்ள சாத்துகுடி ஆக மொத்தம் 25,128 கிலோ (சுமார் 25 டன்) எடை பறிமுதல் செய்யப்பட்டன.



அவை அனைத்தும் மாநகராட்சி குப்பை கிடங்கில் உரம் தயாரிக்க கொட்டி அழிக்கப்பட்டு, அதன் பின்னர் அதனை உரமாக தயாரிக்க முழுவதுமாக அரைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பழங்களின் சந்தை மதிப்பு, சுமார் ரூபாய் 12,56,400/. மேலும், பழங்கள் பறிமுதல் செய்யப்பட்ட 16 பழக்கடை மற்றும் குடோன்களுக்கு உணவு பாதுகாப்புத் துறையின் (Notice) நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதுபோன்று சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வில், செயற்கை முறையில் பழுக்க வைக்க பயன்படுத்திய இரசாயன பாக்கெட்டு அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், இதுபோன்ற கார்பைட் கல், எத்திலீன் இரசாயன பவுடர் பாக்கெட்டுகளை கொண்டு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை உண்பதால் வயிறு தொடர்பான பிரச்சினைகள், கண் எரிச்சல், சரும அலர்ஜி, வாந்தி, பேதி போன்ற உபாதைகள் உண்டாகலாம்.

சில நேரங்களில் சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதில் ஆர்சானிக் மற்றும் பாஸ்பரஸ் இருந்தால் புற்றுநோய் உண்டாகவும் வாய்ப்பு உள்ளது. உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு உடல் வலுவிலக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, இதுபோன்று முறையற்ற விகிதத்தில் இரசாயனங்கள் கொண்டு மாம்பழங்களை பழுக்க வைப்பவர்கள்மீது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் இதுபோன்ற திடீர் கள ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...