தமிழக அமைச்சரவையில் மாற்றம் - இலாக்காக்களை மாற்றி அமைத்து அறிவிப்பு வெளியிட்ட ஆளுநர் மாளிகை!

தமிழக அமைச்சரவையில் மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா இன்று புதிதாகப் தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட 5 அமைச்சர்களுக்கு இலாக்காக்களை மாற்றியமைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த இரண்டாண்டு காலத்தில் அமைச்சரவையில் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்டன.



அதன்படி, போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு அப்பதவிக்கு சிவசங்கர் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி எஸ்.நாசர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அன்றைய தினமே, மன்னார்குடி எம்.எல்.ஏவும், திமுகவின் பொருளாளருமான டி.ஆர்.பாலுவின் மகனுமான டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக அறிவிக்கப்பட்டார்.



இன்று காலை கிண்டி ராஜ்பவனில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றியமைக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

அதன்படி, புதியதாக பொறுப்பேற்ற அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகரானுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையும், நிதியமைச்சராக தங்கம் தென்னரசும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜூக்கு தற்போது பால்வளத்துறை வழங்கப்பட்டுள்ளது. செய்தித்துறை அமைச்சராக பதவி வகித்துவரும் அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு, தமிழ்வளர்ச்சித்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...