பல்லடம் அருகே வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகைகள் கொள்ளை - போலீசார் தீவிர விசாரணை!

பல்லடம் அருகேயுள்ள அல்லாபுரம் பகுதியில் ராஜேந்திர பிரசாத் என்பவரது வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 30 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார், மோப்ப நாய் உதவியுடன் தீவிரமாக தேடி வருகின்றனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 30 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடத்தை அடுத்த கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட அல்லாபுரம் செல்லும் சாலையில் உள்ளது ராயல்பார்க் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் (64). இவர் தனது மனைவி வரலட்சுமி (63) உடன் வசித்து வந்துள்ளார். இவரது மகன் பாலவிஜய் டென்மார்க் நாட்டிலும் மற்றும் மகள் நிவேதா பெங்களூருவிலும் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜேந்திரபிரசாத் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்த நிலையில் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள முசிறிக்கு நேற்று காலை (10.04.2023) வீட்டை பூட்டிவிட்டு இருவரும் காரில் சென்றுள்ளனர்.



நிகழ்ச்சி முடிந்து இன்று காலை ராஜேந்திர பிரசாத் வீட்டுக்கு வந்த போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.



தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 சவரன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து கொள்ளை சம்பவம் பல்லடம் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.



தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனை அடுத்து கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் திருட்டில் ஈடுபட்டு தப்பிஓடிய நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...