கோவை வடக்கு,தெற்கு மண்டலங்களில் ரூ.1.92 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்த மேயர்!

கோவை வடக்கு மற்றும்‌ தெற்கு மண்டலங்களில்‌  தார்சாலை, உயர்மட்ட பாலம்‌, தடுப்புவேலி‌, மின்‌ மயானத்தில்‌ மின்சடங்கு மண்டபம்‌ மற்றும்‌ கழிவறை கட்டுமான பணி என ரூ.1.92 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான கட்டுமான பணிகளை மேயர் கல்பனா பூமிபூஜை செய்து துவங்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்டத்தின் வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் ரூ.1.92 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான பணிகளை மேயர் கல்பனா தொடங்கி வைத்தார்.



கோவை‌ மாநகராட்சியின் தெற்கு மண்டலம் வார்டு எண்‌.94க்கு உட்பட்ட அன்னை இந்திரா நகா்‌, 2 மற்றும்‌ 3வது வீதியில்‌ தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டு திட்டம்‌ - 3(TURIP) கீழ்‌ ரூ.30 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 480 மீட்டர்‌ தொலைவிற்கு நடைபெற்று வரும்‌ தார்‌ சாலை அமைக்கும்‌ பணி,



வார்டு எண்‌.97க்கு உட்பட்ட பிள்ளையார்புரம்‌ சாலையில்‌ ரூ.62 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ உயர்மட்ட பாலம்‌ அமைத்தல்‌, கஸ்தூரி கார்டன்‌ எதிரில்‌ தடுப்புவேலி அமைக்கும்‌ பணிகள்‌,



வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.10க்கு உட்பட்ட சரவணம்பட்டி பகுதியில்‌ சி.ஆர்‌.ஐ.பம்ப்ஸ்‌ நிறுவனத்தின்‌ சார்பில்‌ நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌ ரூ.1 கோடி மதிப்பீட்டில்‌ மின்‌ மயானத்தில்‌ மின் சடங்குமண்டபம்‌ மற்றும்‌ கழிவறை கட்டுமான பணிகள்‌,

இவ்வாறு மொத்தமாக ரூ.1.92 கோடி மதிப்பீட்டிலான பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ பூமிபூஜை செய்து, தொடங்கி வைத்தார்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...