கோவையில் மழையில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியின் போது கிரேன் கவிழ்ந்து விபத்து!

கோவை ரேஸ்கோர்ஸ் மற்றும் ஆர்.எஸ்.புரம் ஆகிய இடங்களில் கனமழை காரணமாக சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியின் போது, கிரேன் வாகனம் திடீரென கவிழ்ந்த நிலையில், அங்கிருந்தவர்கள் உடனடியாக சுதாரித்து கொண்டதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


கோவை: ரேஸ்கோர்ஸ் மற்றும் ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியின் போது, கிரேன் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகரில் நேற்றிரவு ஆர்.எஸ்.புரம், ரேஸ்கோர்ஸ், காந்திபுரம், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதன் காரணமாக கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மேலும் மாநகரில் உள்ள பல்வேறு மேம்பாலங்களுக்கு அடியில் மழைநீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதனிடையே ஆர்.எஸ்.புரம், ரேஸ்கோர்ஸ் பகுதிகளில் சாலையோரங்களில் இருந்த சில மரங்கள் சாய்ந்தன. ரேஸ்கோர்ஸ் பகுதியில் மரம் சாய்ந்ததில் கார் ஒன்று சேதமடைந்தது.



அதேபோல் ஆர்எஸ்புரம் பகுதியிலும் சாலையோரத்தில் இருந்த பழமை வாய்ந்த மரம் சாய்ந்ததில், மின் கம்பிகள் அறுந்து அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. இதனிடயே அந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணிகள் இன்று காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வந்தன.



இந்த நிலையில் மரத்தினை அப்புறப்படுத்துவதற்காக கிரேன் வாகனம் வரவழைக்கப்பட்டு இருந்தது. கிரைன் வாகனத்தின் மூலம் மரத்தை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்ட போது எதிர்பாராத விதமாக கிரேன் வாகனம் சாய்ந்து விபத்திற்கு உள்ளானது. அப்போது, அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் இருந்த மக்கள் சுதாரித்து அங்கிருந்து நகர்ந்துச் சென்றதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.



தற்போது கிரேன் வாகனத்தை மேலும் 2 கிரேன்களை கொண்டு அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பின்னர் சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...