கோவை மாவட்டத்திற்குட்பட்ட பேரூராட்சிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் - ஆட்சியர் ஆய்வு!

கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர், கண்ணம்பாளையம், இருகூர், பள்ளப்பாளையம் ஆகிய பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர், இருகூர் மற்றும் கண்ணம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.



அதன்படி, இருகூர் பேரூராட்சி பகுதியில் நொய்யல் ஆற்றில் நீர்வளத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து சூலூர் பேரூராட்சியில் மூலதன மானிய நிதி திட்டத்தின் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று கோடி மதிப்பில் புதிய குடியிருப்புகள் கட்டும் பணிகளை நேரில் பார்வையிட்டார்.



மேலும் ரூ.50 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணிகளும் ஆய்வு செய்யப்பட்டன. தொடர்ந்து மகளிர் சுய உதவி குழு மூலம் முதல்வரின் காலை உணவு திட்டத்தினை அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தும் விதமாக உணவு சமைப்பு பயிற்றுநர்கள் மூலம் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் செயல்முறை பயிற்சியை ஆய்வு செய்தார்.



அதேபோல் சூலூர் சந்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதையும், கண்ணம்பாளையம் பேரூராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் யோகா மையத்துடன் கூடிய சுகாதார நிலையம் கட்டும் பணிகள், பள்ளபாளையம் பேரூராட்சியில் அமைக்கப்பட்டு வரும் பூங்கா உள்ளிட்ட பணிகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...