கோவையில் சிறுதானிய விழிப்புணர்வு வாக்கத்தான் - குழந்தைகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்பு!

கோவையில் உணவு பாதுகாப்பு ஆணையம் சார்பில் சிறுதானிய விழிப்புணர்வு வாக்கத்தான் நடத்தப்பட்டது. இதில் குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர் உட்பட ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.


கோவை: 2023ம் ஆண்டை சிறுதானியங்கள் ஆண்டாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு இடங்களில் சிறுதானியங்களின் நன்மைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக இன்று கோவையில் உணவு பாதுகாப்பு ஆணையம்(fssai) சார்பில் சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த வாக்கத்தான் பயணத்தை மத்திய உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கண்ணன், கோவை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கிவைத்தனர்.



வ.உ.சி மைதானத்தில் துவங்கிய இந்த வாக்கத்தான் நடைபயணம், பாலசுந்தரம் சாலை வழியாக அவிநாசி சாலையை வந்தடைந்து மீண்டும் வ.உ.சி மைதானத்தில் நிறைவடைந்தது. இதில், குழந்தைகள், பெரியவர்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நடைபயணம் மேற்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...