கோவையில் 847 பள்ளிகளுக்கு காலை சிற்றுண்டித் திட்டம் விரிவாக்கம்..! - ஆட்சியர் கிராந்திகுமார்பாடி தகவல்

கோவை புறநகர் ஊராட்சி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் மேலும் 755 பள்ளிகள் மற்றும் விடுபட்ட 92 நகராட்சி பள்ளிகளில் விரிவாக்கம் செய்வதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டம் சூலூரில் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊரக வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வினை கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி மேற்கொண்டார்.

அதில் இங்குள்ள தனியார் மண்டபத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட மையப் பொறுப்பாளருக்கான பயிற்சி எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு, பயிற்சி மேற்கொள்வது குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார்.



பின்னர், புதிதாக கட்டப்பட்டு வரும் சந்தைப்பேட்டை வளாகத்தை கட்டுமான பணிகளை பார்வையிட்டார். அருகே செயல்பட்டுவரும் சுத்திகரிப்பு நிலையத்தையும் பார்வையிட்டு அதன் தன்மையை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட கலெக்டர் கிராந்திக்குமார் பாடி, 2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சுத்திகரிப்பு நிலையம் முன்னோடி திட்டமாக செயல்பட்டு வருகிறது. சுத்திகரிப்பு நிலையமாக உள்ள இந்த இதை, சுத்திகரிப்பு மையமாக மாற்றி சூலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்து கழிவுநீர் இங்கு கொண்டுவரப்பட்டு பின்னர் சுத்திகரிக்கப்பட்டு குளத்தில் விடுவதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. அதனை பாசனத்திற்கு பயன்படுத்துவதற்கான திட்டமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மாநகராட்சி மற்றும் இரண்டு நகராட்சிகளில் பைலட் திட்டமாக தொடங்கப்பட்டது. அது வெற்றிகரமான திட்டமாக செயல்பட்டதன் காரணமாக மாணவர்களுடைய வருகை பள்ளிகளில் அதிகரித்தது.

தற்போது இது அனைத்து ஆரம்ப பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அதற்கான உணவுகளை தயாரிப்பதற்கு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்களே அதனை தயாரிப்பதற்கான பணியை மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் ஆறுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

அதில் 13 வகையான உணவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அது சமைப்பதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு முன்பாக செயல்படுத்தப்பட்ட காலை உணவு திட்டம் சென்ட்ரலைஸ் கிச்சன் மூலம் வழங்கப்பட்டது. தற்போது, அது மாற்றப்பட்டு மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட உள்ளது.

வீடியோ பயிற்சி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உணவு கலைஞர்கள் மூலம் வடிவமைக்கப்பட்ட வீடியோக்கள் மூலம் அவர்கள் பயிற்சி வழங்கப்பட்ட பின்னர் உணவு தயாரிக்கப்படுகிறது. வருகின்ற காலத்தில் 755 ஊராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் 92 விடுபட்ட நகராட்சிகளிலும் காலை உணவு திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளது.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...