சூலூர் அருகே பாரம்பரிய பவளக்கொடி கும்மியாட்டம் - ஆர்வத்துடன் பார்த்து ரசித்த பொதுமக்கள்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே கம்மாளப்பட்டி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற பவளக்கொடி கும்மியாட்ட நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் பங்கேற்று பாரம்பரிய நடனமாடியதை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.


கோவை: சூலூர் அருகே கம்மாளப்பட்டி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான சுயம்பு மாரியம்மன் திருக்கோவில் பொங்கல் மற்றும் பூச்சாட்டு விழா கடந்த மே 9ஆம் தேதி தொடங்கி, சக்தி கலசம் எடுத்தல், மாவிளக்கு பூஜை, அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்வு, விளக்கு பூஜை போன்ற நிகழ்ச்சிகளோடு நடைபெற்று வருகிறது.

இதையொட்டி,பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் உட்பட 200 பேர் பங்கேற்ற கர்ணன் கலைக்குழுவின் பவளக்கொடி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.



கொங்கு நாட்டின் பாரம்பரிய கலையில் ஒன்றான கும்மி ஆட்டத்தின் மூலமாக மாரியம்மனை அழைத்து வழிபாடு செய்யும் வகையில், அம்மன் பாடல்களை கும்மிப்பாடலாக பாடி கைகளைத் தட்டி கும்மியடித்து அவர்கள் ஆடினர். குழந்தைகளே கும்மி பாடல்களை அழகு கொங்கு தமிழில் பாடி அம்மனை அழைத்த நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.



ஒரே சீருடையில் கும்மி பாடலுக்கு ஏற்ப, கைகளை தட்டி கும்மியாடி பெண்கள், குழந்தைகள் கும்மி ஆட்டத்தை சிறப்பித்தனர்.



பவளக்கொடி கும்மி ஆட்ட ஆசிரியர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கும்மி ஆட்டத்தை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...