மாணவர் சேர்க்கையில் அரசு உதவிபெறும் தனியார் கல்லூரியில் விதிமீறல் - கோவை ஆட்சியரிடம் புகார்!

கோவையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியான பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின் விதிமுறைகளுக்கு எதிராக மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கூறி இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.


கோவை: கோவையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியான பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின் விதிமுறைகளுக்கு எதிராக மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக கூறி இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில், கோவையில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியான பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசு உதவி பெறும் பிரிவை சேர்ந்த மாணவர் சேர்க்கை முடித்த பின்னரே சுயநிதி பாடப்பிரிவு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட வேண்டும்.

ஆனால் இக்கல்லூரியில் மாணவர் மற்றும் பெற்றோர்களிடம் நன்கொடை வசூல் செய்ய திட்டமிட்டு அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பாடப்பிரிவு இரண்டையும் ஒரே நாளில் செய்ய திட்டமிட்டுள்ளது.

இது தமிழக அரசின் விதிமுறைகளுக்கு எதிரானது. அதுமட்டுமின்றி மாணவ மாணவியர் விடுதியில் சேர்க்கையின்போது ஒரே தவணையாக விடுதி கட்டணம் கட்ட கட்டாயப்படுத்தப்படுகிறது.

மாணவ மாணவியர் விடுதி ஒதுக்கீடும் ஒரு தெளிவான வகையில் இல்லை.கல்லூரியில் மாணவர் சேர்க்கை நேர்மையாக நடத்த உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...