திருப்பூரில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் தாமதம்!

பள்ளிக்கல்வித்துறையின் சர்வர் பிரச்னை காரணமாக திருப்பூரில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ-மாணவியருக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.


திருப்பூர்: சர்வர் பிரச்னை காரணமாக மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ-மாணவியருக்கு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது . இதற்காக மாணவ மாணவிகள் படித்த அந்தந்த பள்ளிகளிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் காலை முதல் சர்வர் கோளாறு காரணமாககாத்திருந்த மாணவ-மாணவியர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு மதியத்திற்கு மேல் வழங்கப்பட்டது.இதனால் மாணவ-மாணவியர் மற்றும் அவர்களுடன் வந்த பெற்றோர்கள் நீண்ட நேரம் காத்திருக்கக்கூடிய சூழல் ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...