கோவையில் ரேசன் அரிசி கடத்தல் வழக்கு - தலைமறைவாக இருந்த இளைஞர் கைது!

கோவை - செல்வபுரம் சாலையில் கடந்த மார்ச் மாதம் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் கேரளாவிற்கு கடத்த முயன்ற 3 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த அபிப் ரகுமான் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர்.


கோவை: கோவையில் 3 டன் ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை - செல்வபுரம் சாலையில் கடந்த மார்ச் மாதம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, லாரி மூலம் கேரளாவிற்கு கடத்திச் சென்ற சுமார் 3 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து லாரி ஓட்டுநரை கைது செய்தனர்.

இவ்வழக்கில் தலைமறைவான தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்த அபிப் ரகுமான் என்பவரை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் கோவை - பேரூர் சாலையில் உள்ள தனியார் விடுதியில் பதுங்கியிருந்த அபிப் ரகுமானை போலீசார் இன்று மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும் கைது செய்யப்பட்ட அபிப் ரகுமான் 7 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...