ஆடியோ விவகாரம் தொடர்பாக என் மீது முதல்வர் வழக்கு போட்டால் சந்திப்பேன்..! - அண்ணாமலை பேட்டி

பிடிஆர் ஆடியோ விவகாரத்திற்காக மாற்றப்பட்டிருந்தால் அதை ஏற்க முடியாது. அது அவருடைய தவறல்ல. இப்போதும் நான் சவால் விடுகிறேன். அந்த ஆடியோவில் நான் முதல்வரையும்தான் குற்றம்சாட்டியுள்ளேன். இதற்கும் என் மீது வழக்கு போட்டால் சந்திப்பேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.


சென்னையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

அமைச்சர் நாசர் மீது ஏற்கெனவே நாங்கள் பல குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறோம். அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கியதற்கு பாராட்டுகள். புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர் மனோ தங்கராஜ் பால் கொள்முதல் விலையை உயர்த்தியும் ஆவின் பால் விலையை குறைத்தும் வழங்க வேண்டும். அதற்கு சிறப்பான நிர்வாக அனுபவம் தேவை.

தொழில் துறை பொறுப்பை டிஆர்பி ராஜாவுக்கு வழங்கியிருக்கிறார்கள். அது ஏன் என தெரியவில்லை. அந்த குடும்பம்தான் 20 தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறது. அவர்களுக்கு இந்த துறையை வழங்கியுள்ளார்கள்.

என்ன ஐடியாவில் இதை வழங்கி இருக்கிறார்கள் என தெரியவில்லை. டி.ஆர்.பாலு தனது நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டது, நாடாளுமன்ற அவை குறிப்பிலேயே இடம் பெற்றுள்ளது.

டி.ஆர்.பாலு என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருப்பதாக அறிகிறேன். இதனால் நான் பயந்துவிடப் போவதில்லை. இன்னும் உங்கள் மீதான குற்றச்சாட்டு அதிகமாகுமே தவிர குறையாது.

நிதி அமைச்சராக பொறுப்பு வகித்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மிக சிறப்பாக செயல்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொது மேடைகளிலேயே பாராட்டி இருக்கிறார். அப்படி இருக்கும்போது அவரிடம் இருந்து நிதித்துறையை மாற்றுவதற்கு என்ன காரணம்?

பிடிஆர் ஆடியோ விவகாரத்திற்காக மாற்றப்பட்டிருந்தால் அதை ஏற்க முடியாது. அது அவருடைய தவறல்ல. இப்போதும் நான் சவால் விடுகிறேன். அந்த ஆடியோவில் நான் முதல்வரையும்தான் குற்றம்சாட்டியுள்ளேன்.

இதற்கும் என் மீது வழக்கு போட்டால் சந்திப்பேன். கோர்ட்டே அந்த ஆடியோவை ஆய்வு செய்யட்டும். தவறு செய்தவர்களை பேசியதால் பிடிஆரை பகடைக்காயாக்கக் கூடாது. அன்று கருணாநிதி பாஜக எங்கே இருக்கிறது என கேட்டிருந்தார். இன்று 1461 கோடி கேட்கும் அளவுக்கு நாங்கள் வளர்ந்திருக்கிறோம்.

உங்களை கேள்வி கேட்கும் அளவுக்கு நாங்கள் வளர்ந்திருக்கிறோம். திமுகவின் 2ஆவது ஊழல் பட்டியல் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும். ஏற்கெனவே வெளியிட்ட பட்டியலில் 11 பேர் பெயர் இடம்பெற்றிருந்தது. தற்போது வெளியாகும் பட்டியலில் புதிய அமைச்சர் உள்பட 21 பேர் பட்டியல் இருக்கும்.

இவ்வாறு, அண்ணாமலை தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...