கோவை துடியலூரில் குடும்ப தகராறில் தொழிலாளி தற்கொலை!

கோவை நல்லாம்பாளையத்தில் குடும்பத் தகராறில் ராஜேந்திரன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை கொண்டார். தகவல் அறிந்த துடியலூர் காவல் துறையினர் ராஜேந்திரன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


கோவை: கோவை நல்லாம்பாளையத்தில் குடும்பத் தகராறில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கோவை நல்லாம்பாளையத்தில் குடியிருந்து வருபவர் ராஜேந்திரன். இவரது மனைவி லட்சுமி, கார்ப்பெண்டரான இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதன் காரணமாக அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் மகன் மற்றும் மருமகளுடன் ஏற்பட்ட தகராறில், அவர்கள் தனியாக சென்ற நிலையில் மனைவியிடம் குடிக்கப் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதனால் அவரது மனைவி லட்சுமி அவரது தங்கை வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனால் விரக்தியடைந்த ராஜேந்திரன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்த துடியலூர் காவல் துறையினர் ராஜேந்திரன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...