கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே பைக் திருட்டு - இருவர் கைது!

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வெள்ளமடை பகுதியில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை திருடிச் சென்ற 2 இளைஞர்களை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகே பைக் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த வெள்ளமடையில் குடியிருந்து வருபவர் பெருமாள். இவர் நேற்று முந்தினம் இரவு வீட்டின் முன் தனது பைக்கை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.

காலை வந்து பார்த்த போது, அவரது பைக்கை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து பெருமாள் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்துள்ளர்.

இந்த நிலையில் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வாகனச் சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தபோது அது திருடப்பட்ட வாகனம் என தெரியவந்தது.

இதையடுத்து அதில் வந்த ராஜேஷ் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பைக்கையும் மீட்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...