கர்நாடகா வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலை - பல்லடத்தில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்துவருகிறது. இதனை பல்லடத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.


கோவை: தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் மே 10 ஆம் தேதி நடைபெற்றது.

224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடத்தப்பட்ட இந்த தேர்தலில் ஆட்சியில் இருக்கும் பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் களம் கண்டன.



இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் முடிவுகளில் பாஜக, மற்றும் இதர கட்சிகளைவிட காங்கிரஸ் முன்னிலை பெற்று வருகிறது. இதனை கொண்டாடும் வகையில், பல்லடத்தில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வில் நகரச் செயலாளர் ராமச்சந்திரன், நகர பொதுச் செயலாளர் கிருஷ்ணகுமார், பொருளாளர் சுரேஷ், துணைத் தலைவர் பன்னாரி, துணை செயலாளர் மணிகண்டன், நகர செயல் தலைவர் மணிராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...