கர்நாடகாவில் காங்கிரஸ்க்கு வெற்றிமுகம் - கோவையில் உற்சாகக் கொண்டாட்டம்!

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தில், காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் முன்னணி வகித்து வருவதை, கோவையில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடினர்.


கோவை: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில், அங்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்துவருகிறது.

இதனை, நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இதையொட்டி, பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாட்ட நிகழ்வுகள் நடைபெற்றது.



கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சாய் சாதிக், ராம்கி உள்ளிட்டோர், சாலையில் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிப்பதை கொண்டாடி மகிழ்ந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...