கோவை நீதிமன்ற வளாகத்தில் லோக் அதாலத் - மாவட்ட முதன்மை நீதிபதி பங்கேற்பு!

கோவை நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் தலைமையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்று வருகிறது. காசோலை வழக்கு, வாகன விபத்து, நிலப்பிரச்சனை உள்ளிட்ட நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுவருகிறது.



கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் இன்று நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்ட முதன்மை நீதிபதி ராஜசேகர் தலைமையில் நடைபெற்று வரும் இந்த மக்கள் நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது.



குறிப்பாக நிலுவையில் உள்ள சமரசம் செய்யக்கூடிய வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், நிலம் சம்பந்தமான வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளுக்கு தீர்வு காணப்படும். அதன்படி இன்று நடைபெற்று வரும் மக்கள் நீதி மன்றத்தில் பல்வேறு மனுதாரர்கள் வருகை புரிந்து அவர்களது வழக்குகளுக்கு தீர்வு கண்டு வருகின்றனர்.



இதில் கோவை காடம்பாடி பகுதியைச் சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணன் என்பவரது விபத்து வழக்கிற்கு தீர்வு காணப்பட்டு, தனியார் இன்சூரன்ஸ் மூலம் 18 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. இதனை முதன்மை நீதிபதி ராஜசேகர் வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...