காங்கேயம் நகராட்சி அலுவலகத்தில் நிர்வாண அகோரியை அழைத்து வந்து பூஜை - எஸ்.பி.-யிடம் தி.வி.க. புகார் மனு!

காங்கேயம் நகராட்சி அலுவலகத்தில் நிர்வாண அகோரியை அழைத்து வந்து  பூஜை நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திராவிடர் விடுதலை கழகத்தினர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நிர்வாண அகோரியை அழைத்து வந்து பூஜை நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.பி அலுவலகத்தில் திராவிடர் விடுதலை கழகத்தினர் புகார் மனு அளித்தனர்.

அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, காங்கேயம் நகராட்சி அலுவலகத்தில் ஆண், பெண் எனஇருபாலரும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மதச்சார்பின்மைக்கு எதிராக காங்கேயம் நகராட்சி அரசு அலுவலகத்தில் அகோரியை வைத்து பூஜை நடத்தப்பட்டுள்ளது.



பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக, பொதுமக்கள் கூடும் இடத்தில் இவ்வாறு மதம் சார்ந்த நிர்வாண சாமியார்களை வைத்து பூஜை செய்வது அதிர்ச்சி அளிக்க கூடிய செயலாக உள்ளது.

எனவே அரசு அலுவலகத்திற்குள் அகோரியை வைத்து பூஜை செய்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, திராவிடர் விடுதலை கழகத்தினர் தங்களது மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...