கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி - கோவையில் உற்சாக கொண்டாட்டம்!

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து கோவை கவுண்டம்பாளையம் அடுத்த சுப்ரமணியம்பாளையம் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.



கோவை: கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியதையடுத்து கோவை சுப்பிரமணியம் பாளையம் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சி 130க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்று தனிப்பெரும்பான்மையடன் ஆட்சி அமைக்க உள்ளது.

இதையடுத்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அடுத்த சுப்பிரமணியம்பாளையம் மாநகராட்சி 15 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து தலைமையில் மாநில பொதுச் செயலாளர் பச்சைமுத்து முன்னிலையில் பட்டாசுகளை வெடித்தும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல் காதர், சர்க்கிள் தலைவர் சின்னு ராமகிருஷ்ணன், வார்டு தலைவர் செந்தில்குமார், சிங்காரவேலு, சுந்தரம், சதீஷ்குமார், வி.சி.எஸ்.மணி, எஸ்.ஏ.நடராஜ், பழனிச்சாமி, ரங்கசாமி, கோபால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு காங்கிரஸ் வாழ்க என கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து இதுகுறித்து அவர்கள் பேசுகையில், வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...