வால்பாறை மக்கள் நீதிமன்றத்தில் 83 வழக்குகளுக்கு தீர்வு!

வால்பாறையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 156 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 11 வழக்குகள் உட்பட 83 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. மேலும் அபராதமாக ரூ.7,49,000 வசூலிக்கப்பட்டது.


கோவை: வால்பாறையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் நிலுவையில் இருந்த 11 வழக்குகள் உட்பட 83 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி தமிழ்நாடு அனைத்து நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதன்படி வால்பாறை நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்திற்கு நீதிமன்ற நடுவர் ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார்.



வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ஆா்.ஆா். பெருமாள், சட்ட பணிகள் குழு உறுப்பினா் விஸ்வநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மொத்தம் 156 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதில் 83 வழக்குகள் உடனடியாக முடிக்கப்பட்டது.

கிரிமினல் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், லாட்டரி சீட்டு விற்பனை, சீட்டு விளையாட்டு போன்றவை மூலம் ரூ. 1,09,000 அபராதம் விதிக்கப்பட்டது.



மேலும் இதில், 10 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்த 11 தோட்ட நிறுவன வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. செக் மோசடி வழக்குகள் ரூ.6,40,000 முடிக்கப்பட்டது.

மக்கள் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பால்பாண்டி, முருகன், முத்துசாமி, சுமதி ஆகியோர்களும், சட்ட தன்னார்வ பணியாளா்கள், மூர்த்தி, வால்பாறை முனியாண்டி, காஞ்சமலை முனியாண்டி, தோட்ட நிறுவனங்கள் ஆய்வாளா் முத்துப்பாண்டி ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...