கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி - முதலமைச்சர் யார் என நாளை தேர்வு!

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் முதலமைச்சர் யார் என தேர்ந்தெடுப்பதற்கான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளைய தினம்  நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


பெங்களூரு: கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் யார் என நாளை தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 2,615 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மேலும் இந்த தேர்தலில், ஆளும் பாஜக 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 207 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

வரும் 2024ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

இந்த தேர்தலில் 73.19 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் வெற்றி முகத்தில் உள்ளது. பாஜக 65 இடங்களிலும், மஜதா 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த அமோக வெற்றியின் மூலம் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியை அடுத்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை பெங்களூருவில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் புதிய முதலமைச்சர் யார் என்பது தேர்ந்தெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தை நடத்துவதற்காக அகில இந்திய காங்கிரஸ் பார்வையாளர்கள் வர உள்ளனர். முதலமைச்சர் பதவிக்கு டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா இடையே கடும் போட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய முதலமைச்சர் பதவி ஏற்பு விழா வரும் 17 அல்லது 18ஆம் தேதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி கிடைத்துள்ளதால், கர்நாடகா மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் மிகுந்த உற்சாகத்துடன் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...