அக்காமலை எஸ்டேட் புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி - திரளான பக்தர்கள் பங்கேற்பு!

வால்பாறை அருகேயுள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி விழாவில், உள்ளூர், வெளியூர் என பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்று வழிபாடு செய்தனர்.



கோவை: வால்பாறை அக்காமலை எஸ்டேட் புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர்த்திருவிழா கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.



அதைத்தொடர்ந்து கடந்த 13 ஆம் தேதியன்று மாலை பங்குதந்தை ஜெகன் ஆண்டனி தலைமையில், உதவி பங்கு தந்தை இம்மானுவேல் பீட்டர் முன்னிலையில், மெழுவர்த்தி ஏந்திய பங்கு மக்கள் முன்னே செல்ல ஆடம்பர தேர்பவனி அக்காமலை எஸ்டேட் முதல் பிரிவு மஸ்டர் பகுதியிலிருந்து தொடங்கியது.



எஸ்டேட் பகுதியில் ஊர்வலமாக சென்ற இந்த தேர்பவனியில் கலந்து கொண்ட பங்குமக்களும் சபை மக்களும் மாதா, புனித அந்தோணியார் உருவங்களுக்கு பூமாலை மற்றும் பூக்கள், உப்பு, மிளகு ஆகியவற்றை வழங்கி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றவும் நிறைவேற்றிய கோரிக்கைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மனமுருக வேண்டினர்.



பின்பு தேரிலிருந்து புனித அந்தோணியார், மேரி மாதா உருவங்களை ஆலயத்திற்கு பங்கு மக்கள் எடுத்துச்சென்றனர். அதைத்தொடர்ந்து சிறப்பு கூட்டுப் பாடற்பலி நடைபெற்று வெகு சிறப்பாக தேர்த்திருவிழா இனிதே நிறைவடைந்தது. பின்பு சபைமக்கள் அனைவருக்கும் அன்பின் விருந்து நடைபெற்றது.

இவ்விழா ஏற்பாடுகளை சபை மக்கள் செய்திருந்த நிலையில் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், ஆலய பங்கு மக்களும் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...