திருப்பூரில் பாஜக சார்பில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை துவங்கி வைத்த நடிகை நமீதா!

திருப்பூரில் பாஜக சார்பில் துவங்கப்பட்ட மின்னொளி கிரிக்கெட் போட்டியினை திரை நட்சத்திரமும் பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினருமான நமீதா கலந்து கொண்டு பவுலிங் மற்றும் பேட்டிங் விளையாடி வீரர்களை உற்சாகப்படுத்தி போட்டிகளை துவக்கி வைத்தார்.



திருப்பூர்: திருப்பூரில் பாஜக சார்பில் நடைபெறும் மின்னொளி கிரிக்கெட் போட்டியை நடிகையும் பாஜக செயற்குழு உறுப்பினருமான நமீதா துவங்கி வைத்தார்.

திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில் அங்கேரிபாளையம் சாலையில் மாநில தலைவர் அண்ணாமலை கோப்பைக்கான மின்னொளி கிரிக்கெட் போட்டி என்ற பெயரில் கட்சி நிர்வாகிகளுக்கான கிரிக்கெட் போட்டி இன்று துவங்கியது.



இதனை மாநில பொதுச் செயலாளர் கே.பி. முருகானந்தம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினரும் திரை நட்சத்திரமான நமீதா கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.



முன்னதாக மேடையில் பேசிய நமீதா, எந்த கட்சியிலும் இல்லாத அளவு கட்சியினை குடும்பம் போன்ற ஒற்றுமையாக கொண்டு செல்வதற்கு இது போன்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது என்றார்.

தொடர்ந்து கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர் பௌலிங் மற்றும் பேட்டிங் என விளையாடி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நமீதா பேசியதாவது, கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து வருத்தம் இருந்தாலும் கூட இந்த முறை இல்லை எனில் அடுத்த முறை என ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை நோக்கி செயல்பட கட்சி தயாராகி வருகிறது. இந்த கிரிக்கெட் போட்டியில் பாஜகவின் நிர்வாகிகள் 24 அணிகளாக பிரிந்து ஏழு ஓவர் கிரிக்கெட் போட்டிகளை விளையாட உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...