விடுதலை இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும்? - அப்டேட் கொடுத்த நடிகர் சூரி!

கோவை மாவட்டம் சூலூர் அருகே கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற நடிகர் சூரி, மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்த போது, விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வரும் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்றும் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் 13 பரோட்டாக்களை சாப்பிட்டதாகவும் தெரிவித்தார்.


கோவை: சூலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியின் ஆண்டு விழாவில் நடிகர் சூரி பங்கேற்று மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

கோவை சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் சூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்லூரியில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.



பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் எத்தனை பரோட்டா சாப்பிட்டீர்கள் என்ற மாணவர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த நடிகர் சூரி, வெண்ணிலா கபடி குழு படத்தில் 13 புரோட்டா மட்டுமே சாப்பிட்டேன், டைரக்டர் சிறப்பாக அந்த காட்சி அமைய வேண்டும் என்பதற்காக காலை முதல் எதுவும் சாப்பிட கூடாது என சொல்லிவிட்டார். அதனால் 13 புரோட்டாக்கள் வரை சாப்பிட முடிந்தது என்றார்.

பெண்களை தொட்டு நடித்த பழக்கமே இல்லாததால் விடுதலை படத்தில் பவானி மேல் கை வைக்கும் அந்த காட்சி வரும் பொழுது அதிகமாக பதற்றப்பட்டேன். அதனால் அந்த காட்சி 12 முறைக்கு மேல் எடுக்கப்பட்டது. படத்தில் கதைக்கு ஒத்து வந்தால் ரொமான்ஸ் செய்ய தயாராக இருக்கிறேன். விடுதலைப் படத்தில் நடித்ததற்காக எல்லா நடிகர்களும் எனக்கு வாழ்த்துக்கள் சொன்னார்கள்.

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் படத்தை பார்த்துவிட்டு இரவு 11 மணிக்கு போன் செய்து எனக்கு வாழ்த்து சொன்ன தருணம் மறக்க முடியாத ஒன்று என் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சூப்பர் ஸ்டார் வாழ்த்து செய்ததை கண்டு மகிழ்ந்தோம் படத்தில் குமரேசனாக வாழ்ந்திருக்கிறீர்கள். படம் முழுவதும் அதுதான் வெளிப்பட்டுள்ளது உங்கள் வளர்ச்சிக்கு கடவுள் துணை நிற்பார் கடவுள் அனைத்தையும் கொடுப்பார் என்று பாராட்டினார்.

விடுதலை பார்ட் 2 அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும். சூரி நடனம் செய்தால் யாராலும் பார்க்க முடியாது. நடிகர் அஜித்தின் படத்தில் நடித்த பின்பு தான் எனக்கு வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட பட வாய்ப்புகள் கிடைத்தது.

அஜித் சார் என்னிடம் பேசும் போது யார் எது சொன்னாலும் மற்றவர்கள் குறித்து கவலை கொள்ள வேண்டாம். உங்களை நீங்கள் மதிக்க வேண்டும் மாணவர்களுக்கு எது சரியென படுகிறதோ அதனை மாணவர்கள் செய்ய வேண்டும் எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டும்.

இவ்வாறு நடிகர் சூரி மாணவர்கள் மத்தியில் பேசினார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...