வால்பாறை அருகே காட்டு யானை விரட்டியதில் கீழே விழுந்து பெண் படுகாயம்!

வால்பாறை அருகே உள்ள பிலண்டிவேலி எஸ்டேட் பகுதியை சேர்ந்த அமராவதி என்ற பெண் கடைவீதிக்கு சென்று திரும்பிய போது காட்டு யானை விரட்டியதில் கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: வால்பாறை அருகே காட்டு யானை விரட்டியதில் தடுக்கி விழுந்து பெண் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை அருகே பிலண்டிவேலி எஸ்டேட் பகுதி உள்ளது. இங்கு 40க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதியில் தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு செல்லும் சின்னசாமி (57) என்பவரது மனைவி அமராவதி (47) ஆகியோரும் குடியிருந்து வருகின்றனர்.

இதனிடையே இன்று காலை 7 மணி அளவில் வீட்டில் இருந்து கடை வீதிக்கு சென்ற அமராவதி தனது உறவினர்களை அழைத்து மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வரும் வழியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை இவர்களை விரட்டியது.

யானையை பார்த்து அனைவரும் அலறியடித்து ஓடிய நிலையில் அமராவதி ஒட முடியாமல் தடுக்கி கீழே விழுந்து உள்ளார்.

இதில் அவருக்கு கை, கால், தலை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.



இதனையடுத்து அவரை மீட்ட உறவினர்கள் எஸ்டேட் வாகனத்தில் வால்பாறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே தகவல் அறிந்து வந்த வால்பாறை வனச்சராக வனத்துறையினர் யானையை வனப்பகுதியில் இருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...