கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை - மர்ம நபர்கள் கைவரிசை!

கோவை கோனியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது யார், உண்டியலில் பணம், நகை எவ்வளவு இருந்தது என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவில் டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அன்றாடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து, தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கோவிலுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலின் பூட்டை உடைத்து அதிலிருந்த பணம், நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.



உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளை போயிருந்ததை கண்ட கோவில் காவலாளி அதிர்ச்சியடைந்து உடனே இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் மற்றும் காவல் துறையினருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.

அதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர்.



மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா? என்பது குறித்தும் சோதனை செய்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் கோவில் தேர் திருவிழா பல ஆயிரம் பக்தர்கள் புடைசூழ வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்த நிலையில் உண்டியலில் எவ்வளவு பணம் இருந்தது? அதனை கொள்ளையடித்து சென்றவர்கள் யார்? இந்த சம்பவத்தில் ஒரே நபர் ஈடுபட்டாரா? அல்லது கூட்டு சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனரா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவையில் பிரசித்தி பெற்ற கோனியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...