தமிழகத்தில் 26,000 கோவில்களில் அர்ச்சகர்கள் இல்லை - முன்னாள் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தகவல்!

கோவையில் நடைபெற்ற உலக சிவனடியார்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்க வேல், தமிழகத்தில் 26,000 கோவில்களில் அர்ச்சகர்கள் இல்லாத சூழல் நீடிக்கிறது. இந்த கோவில்களில் உள்ள தெய்வ திருமேனிகளை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.


கோவை: தமிழகத்தில் 26,000 கோவில்களில் அர்ச்சகர்கள் இல்லாத சூழல் நீடிப்பதாக முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

கோவை பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் திருமடத்தில் உலக சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் சைவப்பெருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வை தொடர்ந்து, பொன்மாணிக்கவேல் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,



உலகில் பல நாடுகளிலும் சிவனடியார்கள் உள்ளனர். குறிப்பாக தமிழகத்திலுள்ள சிவனடியார்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டும்.

அதற்கான நோக்கம் ஒன்று தான். நம் முன்னோர்கள் தேடி வகுத்துக் கொடுத்து கோவில்களை இறைவனின் திருமேனிகளையும் பாதுகாப்பது தான். தமிழகத்தில் 26,000 கோவில்களில் அர்ச்சகர்கள் இல்லாத சூழல் நீடிக்கிறது.

அனைத்து கோவில்களிலும் உள்ள தெய்வ திருமேனிகளை பாதுகாக்க வேண்டும். அதற்கு 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உலக சிவனடியார் திருக்கூட்டத்தில் இணைய வேண்டும். தெய்வ தொண்டு ஆற்ற வேண்டும்.

அப்போது இந்து சமயம் தழைத்தோங்கும், கோவில்களும், திருமேனிகளும் பாதுகாக்கப்படும். அடுத்து வரும் தலைமுறையினருக்கு வழிகாட்டுதலாக இருக்கும். கோவில் சிலை திருட்டு வழக்குகள் பதிவு செய்வதில் காவல்துறையினர் அக்கரை காட்டவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...