இரவில் குடித்த நபருக்கு பகலில் அபராதம் விதித்த பல்லடம் போலீசார்!

பல்லடம் அருகே மாணிக்காபுரத்தைச் சேர்ந்த பாலச்சந்திரன் என்பவர் பைக்கிற்கு பெட்ரோல் போட சென்ற போது, வழிமறித்த போக்குவரத்து போலீசார், குடித்துள்ளதாக கூறி ரூ.10,000 அபராதம் விதித்த நிலையில், அவர் நேற்றிரவு குடித்ததற்கு இன்று அபராதம் விதித்து பைக்கை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: பல்லடத்தில் இரவில் குடித்த நபருக்கு பகலில் போலீசார் அபராதம் விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மாணிக்காபுரத்தில் வசித்து வருபவர் பாலச்சந்திரன். இவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். நேற்றிரவு பணி முடித்து விட்டு 1 மணி அளவில் பல்லடம் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள பாரில் மது வாங்கி சென்று வீட்டில் அருந்தி உள்ளார்.

இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் தனது பைக்கிற்கு பெட்ரோல் போடுவதற்காக பல்லடத்திற்கு வந்துள்ளார்.



அப்போது பல்லடம் நால் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் பாலச்சந்திரனை நிறுத்தி, மது அருந்தி உள்ளதாக கூறி பாலச்சந்திரனுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து பைக்கை பறிமுதல் செய்துள்ளனர்.



இரவு தான் மது அருந்தினேன் எனவும், காலையில் மது அருந்தவில்லை என பாலச்சந்திரன் போக்குவரத்து காவலரிடம் முறையிட்டும் காவலர்கள் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அபராத சீட்டில் கையெழுத்து போடு என வற்புறுத்தி உள்ளனர்.



இதைத்தொடர்ந்து பைக்கை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு நடந்தே தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இதுகுறித்து பாலச்சந்திரன் கூறியதாவது, பல்லடம் பேருந்து நிலையம் அருகே 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது.

இதை காவல்துறை தடுக்காமல் இரவு மது அருந்தியதற்கு பகலில் அபராதம் விதிப்பது நியாயமா? அரசு நிர்ணயித்த நேரத்தில் மதுபான கடையை மூடி இருந்தால் 1மணிக்கு நான் ஏன் குடிக்க போகிறேன்.

இரவு நேரங்களில் 300க்கும் மேற்பட்ட லாரிகள் அதிக லோடு ஏற்றிக் கொண்டு பல்லடத்தை கடந்து செல்கிறது. எங்களுக்கு அபராதம் விதிக்கும் போக்குவரத்து காவல்துறையினர் ஓவர் லோடு ஏற்றிச் செல்லும் கேரள வாகனங்களுக்கு அபராதம் விதிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

இது குறித்து பல்லடம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசுவிடம் கேட்டதற்கு, ப்ரீத் அனலைசர் மூலம் பரிசோதனை செய்த போது பாலச்சந்திரன் குடித்ததாக பரிசோதனை முடிவு வந்துள்ளது. இன்று பணியில் உள்ள காவலர் நாளை விடுமுறைக்கு செல்கிறார். டார்கெட் முடிப்பதற்காக காலை முதலே வாகன பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...