பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கி மீண்டும் படிப்பை தொடர வைக்கும் போலீசார்!

கோவை மாநகர் பகுதியில் பல்வேறு காரணங்களுக்காக பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களை காவல்துறை சார்பில் நேரில் சந்தித்து, அவர்களுக்கு கவுன்சலிங் வழங்கி, படிப்பை மீண்டும் தொடர பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களுக்கு கவுன்சலிங் வழங்கி படிப்பை மீண்டும் தொடர வைத்து காவல்துறை சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, கோவை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படித்து பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக பள்ளி படிப்பை பாதியில் விட்டவர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதன்படி இடைநின்ற மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மாணவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, கல்வி உள்ளிட்ட அடிப்படை உதவிகள் குறித்து மாநகர போலீஸ் துறையின் தனி சிறுவர் காவல் உதவி பிரிவு, சட்டம் ஒழுங்கு பிரிவு ஆகியவை ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாநகரில் 286 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆய்வு செய்யப்பட்டதில் 894 மாணவ - மாணவிகள் தங்களது படிப்பை பாதியில் கைவிட்டது தெரியவந்தது. இதில், 226 மாணவர்கள் சம்பந்தப்பட்ட போலீசார் நேரில் சந்தித்து படிப்பை பாதியில் விட்டதற்கான காரணம் குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு தகுந்த கவுன்சிலிங் வழங்கப்பட்டது.

இதில், 91 மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இவர்கள் நடந்து முடிந்த முழு ஆண்டு தேர்வையும் எழுதினர். இதில் 12 பேருக்கு பள்ளி கட்டண உதவியும், 4 பேருக்கு மருத்துவ உதவியும் தன்னார்வ அமைப்புகள் மூலம் வழங்கப்பட்டன.

கோவை மாநகரில் 702 மாற்றுத்திறனாளி மாணவ - மாணவிகள் உள்ளது கண்டறியப்பட்டது. இவர்களில் 316 பேரை சம்பந்தப்பட்ட போலீசார் கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் கடந்த 10-ந் தேதி வரை நேரில் சந்தித்து அவர்களின் குறைகள் குறித்து கேட்டறிந்தனர்.

இதில் 43 பேருக்கு பள்ளி கட்டணம், 5 பேருக்கு மருத்துவ உதவி செய்யப்பட்டதுடன், 2 பேரின் பெற்றோருக்கு வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டது. இதுதவிர குழந்தைகள் பாதுகாப்பு, இணை வழி குற்றங்கள் குறித்து பள்ளிகளுக்கு நேரடியாக சென்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதுதவிர கொலை குற்ற வழக்குகள், சாலை விபத்து வழக்குகள், போக்சோ வழக்குகள், குடும்ப பிரச்சினைகள் உள்ளிட்டவற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் கடந்த 2022-ம் ஆண்டு முதல் மனநல ஆலோசகர்கள் உதவியுடன் 131 பேருக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...