வால்பாறையில் உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் கிரிக்கெட் போட்டி - 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு!

வால்பாறை நகர உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடினர்.


கோவை: வால்பாறையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை நகர உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிரிக்கெட் அணிகள் விளையாடினர். இந்த கிரிக்கெட் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வால்பாறை நகர மன்ற தலைவர் எஸ் அழகு சுந்தரவள்ளி செல்வம் கலந்துகொண்டார்.



இந்த போட்டியில் 20-க்கும் மேற்பட்ட அணிகள் விளையடின. இறுதிப் போட்டியில் பொன்னமராவதி மற்றும் வாட்டர் ஃபால்ஸ் எஸ்டேட் ஆகிய அணிகள் மோதியது.



இதில் வாட்டர் ஃபால்ஸ் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு பரிசாக கோப்பை வழங்கப்பட்டது. இதேபோல் விளையாடிய அனைத்து அணிகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...