ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய ராணுவ வீரர் - திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் மனு!

திருப்பூர் அடுத்த இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்த நிலையில், வெங்கடேசன் என்ற ராணுவ வீரர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.


திருப்பூர்: திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் ஒருவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணமாகி இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.



இந்நிலையில், இவருக்கும், ராணுவத்தில் பணியாற்றும் உறவுக்காரரான வெங்கடேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. வெங்கடேசன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அடிக்கடி நெருங்கி பழகியதால், அவர் கர்ப்பமடைந்துள்ளார்.

இதையறிந்த வெங்கடேசன் தோழியுடன் சேர்ந்து குளிர்பானத்தில் கருகலைப்பு மாத்திரை கலந்து கொடுத்ததால் கரு கலைந்துள்ளது. இதுகுறித்து கேட்டபோது வெங்கடேஷ் உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது எனவும், வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இருவரும் தனிமையிலிருந்த போது எடுத்த போட்டோ, வீடியோவை வைத்து கொண்டு, என்னை தொந்தரவு செய்தால் அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டி வருகிறார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.



இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...