சொத்துகளை விற்றுவிட்டு கவனிக்காமல் விட்ட பிள்ளைகள் - திருப்பூர் ஆட்சியரிடம் மூதாட்டி மனு!

சொத்துகளை விற்றுவிட்டு தன்னை கவனிக்காமல் தனியாக விட்டுச் சென்ற மகன் மற்றும் மகள்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 80வயது மூதாட்டி ஒருவர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.


திருப்பூர்: சொத்தை விற்று பங்கு போட்டுக் கொண்டு, தன்னை கவனிக்காமல் விட்ட பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் மனு அளித்துள்ளார்.

திருப்பூர் சூசையாபுரம் பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டிக்கு சொந்தமான வீடு மற்றும் 5 சென்ட் இடத்தை இரண்டு ஆண் பிள்ளைகள் மற்றும் மூன்று பெண் பிள்ளைகள் அனைவரும் சேர்ந்து 60 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர்.



சொத்தை விற்பனை செய்த பிறகு மூதாட்டியை பிள்ளைகள் யாரும் கவனிக்காமல், எதிர்காலத்திற்கு தேவையான எந்த வழியும் செய்யாமல் மோசடி செய்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் தான் தற்போது சூசையாபுரத்தில் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் வாழ்ந்து வருவதாக கூறியுள்ள மூதாட்டி, மாவட்ட நிர்வாகம் முதியோர் பாதுகாப்பு சட்டத்தின்படி தனது சொத்துக்களை விற்று, தன்னை கவனிக்காமல் சென்ற பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுத்து தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...