கோவையில் நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் நகையை பறிக்க முயற்சி - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

கோவை ஜி.வி.ரெசிடென்ஸி அருகே நடைபயிற்சி மேற்கொண்ட பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க நகையை காரில் வந்த மர்ம நபர்கள் பறிக்கு முயன்ற சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.



கோவை: கோவை அடுத்த ஜி.வி.ரெசிடென்ஸி அருகே நடைபயிற்சிக்குச சென்ற பெண்ணின் செயினை பறிக்க காரில் தரதரவென இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

கோவை பீளமேடு ஹட்கோ காலணி பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா(38). இவர் வழக்கமாக தனது கணவருடன் நடைபயிற்சிக்கு செல்வார். இந்நிலையில் இன்று காலை கவுசல்யா மட்டும் நடைபயற்சிக்கு சென்றார்.



அப்போது கவுசல்யா ஜி.வி.ரெசிடென்ஸி அருகே வந்த போது பின்னால் காரில் வந்த மர்ம நபர்கள் கவுசல்யா கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றனர். அப்போது அவர் செயினை பிடித்துக் கொண்டதால் காரில் இழுத்துச் செல்லப்பட்டார்.



அப்போது அதிர்ஷ்டவசமாக காரின் டயரில் சிக்காமல் உயிர் தப்பினார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...