துடியலூரில் இந்து மகாசபா நிர்வாகி வீட்டின் காவலாளியை தாக்கிய மர்ம கும்பல் - சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

துடியலூர் அருகே பன்னிமடை பகுதியில் அகில பாரத இந்து மகா சபா மாநில இளைஞரணி தலைவரான சுபாஷ் என்பவரது வீட்டின் காவலாளியை 13 பேர் கொண்ட மர்ம கும்பல் தர்ம அடி கொடுக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: துடியலூர் அருகே இந்து மகா சபா நிர்வாகி வீட்டின் காவலாளியை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை ஆண்டாள் அவன்யூ பகுதியில் அகில பாரத இந்து மகா சபா தென் பாரத ஒருங்கிணைப்பாளரும், மாநில இளைஞரணி தலைவருமான கே சுபாஷ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.



இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் திடீரென அந்தப் பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் சுபாஷ் வீட்டில் காவலாளியாக வேலை பார்த்து வரும் 68 வயதான கதிர்வேல் என்பவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.



இதில் அவருக்கு முகம், நெஞ்சு, கை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தடாகம் போலீசார் காவலாளி கதிர்வேலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவரை தாக்கியதாக சந்தேகிக்கும் மர்ம நபர்களை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தத் தகவல் அறிந்ததும் பெரிய நாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம் உள்ளிட்ட உயரதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தொடர்ந்து அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆராயும் போது காவலாளி கதிர்வேலை தாக்கும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளது. இதுகுறித்து மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



ஏற்கனவேசுபாஷின் 2 கார்களை தீ வைத்த எரித்தும், அவரது வீட்டில் இருந்த வெளிநாட்டு நாயையும் மருந்து வைத்து கொலை செய்தும், மேலும் சுபாஷை ஒரு முறை தாக்க முயன்றது உள்ளிட்ட வழக்குகள் தடாகம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...