நொய்யல் ஆற்றில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க கோரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு!

நொய்யல் ஆற்றில் மருத்துவக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுவதை தடுத்து நிறுத்தி நொய்யல் ஆற்றை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.


கோவை: நொய்யல் ஆற்றில் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுவதை தடுக்க கோரி நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நொய்யல் ஆற்றில் சில தினங்களுக்கு முன்பு தொழிற்சாலை ரசாயன கழிவுகள் கலந்ததால் நுரைத் ததும்பி ஓடும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து நொய்யல் ஆற்றை பாதுகாக்க வேண்டும் என பல்வேறு பொதுமக்கள் விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே மாவட்ட ஆட்சியரும் அப்பகுதியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் நொய்யல் ஆற்றில் மருத்துவமனை கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள், வீட்டு கழிவுகள் அனைத்தும் கலக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் நொய்யல் ஆறு மாசடைந்து விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

எனவே இவற்றைத் தடுத்து நிறுத்தி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

மேலும் நொய்யல் ஆற்றின் நீரை சுத்தப்படுத்தி நொய்யல் ஆற்றை பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...