சர்வதேச யோகா போட்டியில் அசத்திய மாணவர்கள் - கோவை ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றனர்!

நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான யோகா போட்டியில் இந்தியாவின் சார்பில் கோவையை சேர்ந்த இனியா, ராகவி, கோகுல், கிருஷிகா, சிவபாலன், விஷ்ணு பிரியா, சம்ருத், ஹரித் கான், ஹர்ஷித், சபரி சரண், ரித்திகாஸ்ரீ ஆகியோர் பங்கேற்று தங்கம் வென்று அசத்திய நிலையில் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


கோவை: சர்வதேச யோகா போட்டியில் தங்கம் வென்ற மாணவ, மாணவிகள் கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

நேபாளத்தில் கடந்த 7, 8, 9 ஆகிய தேதிகளில் சர்வதேச அளவிலான யோகா போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியா, நேபாளம், சீனா, மலாய், திபெத் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்றனர்.

இந்தியாவின் சார்பில் பங்கேற்ற கோவையைச் சேர்ந்த இனியா, ராகவி, கோகுல், கிருஷிகா, சிவபாலன், விஷ்ணு பிரியா, சம்ருத், ஹரித் கான், ஹர்ஷித், சபரி சரண், ரித்திகாஸ்ரீ ஆகியோர் தனி நபர் யோகா போட்டியில் தங்கம் வென்று அசத்தினர்.



இந்நிலையில் பதக்கங்களை வென்று கோவை திரும்பிய மாணவ, மாணவிகள், இன்றைய தினம் கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, தாங்கள் பெற்ற பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...