கோவை அருகே முறையான குடிநீர் விநியோகம் இல்லை - ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

கோவை அடுத்த தீத்திபாளையம் ஊராட்சிக்குட்பட்ட 11வது வார்டில் குடிநீர் விநியோகிக்கப்படாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் வார்டு கவுன்சிலர் மாணிக்கராஜ் தலைமையில் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: தீத்திபாளையம் ஊராட்சிக்குட்பட்ட 11வது வார்டில் குடிநீர் விநியோகிக்கப்படாததை கண்டித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் தீத்திபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட 11ஆவது வார்டில் சரவணா கார்டன் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 15 நாட்களாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து ஊராட்சி அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் பேரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பொறுமையை இழந்த அப்பகுதி மக்கள் 11 வது வார்டு கவுன்சிலர் மாணிக்கராஜ் தலைமையில் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இந்நிலையில், பொதுமக்களிடம் தீத்திபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இனி வரும் நாட்களில் சீரான குடிநீர் கொடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் ஊராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...